குரங்கின் அட்டகாசம்

குரங்கின் அட்டகாசம்

வாழைத்தோப்பில் பங்கு என்கிற குரங்கு ஒன்று பல நாட்களாக அட்டகாசம் செய்து வந்தது. அதிக அளவில் வாழைப் பழங்களை உண்பது. பழங்களை பறித்து கீழே போடுவது வாழைப்பூவை கடிப்பது போன்ற பல சேட்டைகளை செய்து வந்தது.இந்த குரங்கு செய்யும் செயல்களை தாங்கமுடியாமல் குமார் ஒரு மரத்தடியில் அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக குமார் தம்பி கார்த்திக் வந்தான். ஏன் அழுகிறாய் அண்ணா என்று கேட்டான்.அதற்கு குமார் நம் வாழைத்தோப்பில் ஒரு குரங்கு அட்டகாசம் பொறுக்க முடியவில்லை.
அதிகளவில் சேட்டை செய்து வந்தது. என்னால் அந்த குரங்கை கட்டுப்படுத்த முடியவில்லை.அதனால் அந்த குரங்கை இடம் ஒப்பந்தம் ஒன்று போட்டுக் கொண்டேன். தினமும் 10 வாழைப்பழங்களை தருகிறேன் இனிமேல் இப்படி செய்யாதே என்று குமார் கூறினார். இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக் கொண்டு சென்ற குரங்கு யோசித்துக்கொண்டே நடந்தது.
அப்போது நமக்கு இவன் பயப்படுகிறான்.கேட்டது கேட்டுவிட்டோம் சிறிது அதிகமாக கேட்டுவிடலாம் என்று மீண்டும் வந்து குமாரிடம் தினமும் 20 பழங்களை கொடுக்க வேண்டும் என்று கூறியது. அப்படி கொடுக்கவில்லை என்றால் நான் தினமும் செய்வதையே தொடர்ந்து செய்வேன் என்று மிரட்டியது.
குரங்கு கூறியதை பயந்து தலையாட்டினான்.நாளுக்கு நாளாக குரங்குகளின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது.இப்போது நேரில் வந்து நிற்கிறது தம்பி என்ன செய்வதென்று தெரியவில்லை. கார்த்திக் அண்ணா நாளை பாருங்கள்.உன் உடைகளை கூட பின்பு நான் செய்வதை நீ செய்தால் போதும் என்று கூறி நாளை பார்க்கலாம் எனக்கு சிறிது வேலை உள்ளது என்று கூறி சென்றான்.
மறுநாள் குரங்கு வந்தது.குமார் ஆடைகளை அணிந்து கார்த்திக் அமர்ந்திருந்தான். நீ கேட்ட படங்களை மூட்டை கட்டி வைத்து உள்ளேன். என்னால் தூங்கமுடியவில்லை நீயே எடுத்துக்கொள் என்று கூறினார்.படத்தை பார்த்தவுடன் ஆசையில் அருகில் சென்றவுடன் கூண்டில் மாட்டிக்கொண்டது குரங்கு. கார்த்திக் நன்றாக மாட்டிக் கொண்டாயா! உன்னை விலங்கு சரணாலயத்தில் விடுகிறேன்.அது தினமும் அதிக அளவில் பழத்தை உண்ணலாம் என்று கூறினார். குமார் மரத்திலிருந்து மகிழ்ச்சியாக  இறங்கி வந்தான். இருவரும் இணைந்து குரங்கை கூண்டில் பிடித்தனர். குரங்கு அதிக அளவில் வருத்தப்பட்டது.
பேராசை பெரும் நஷ்டம்.

Comments

Popular posts from this blog

குரங்கும் தொப்பி காரனும்

இந்த திராட்சை புளிக்கும்

புலியும் நான்கு பசுவும்