புலியும் நான்கு பசுவும்

புலியும் நான்கு பசுவும்

ஒரு காட்டில் நான்கு பசுக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தது. எப்போதுமே நான்குமே ஒன்றாகத்தான் இருக்கும். உணவு தேடிச் சென்றாலும் தண்ணீர் பருகினால் ஒன்றாகத்தான் செல்லும். காட்டில் உள்ள அனைத்து வேட்டை மிருகங்களும் இந்த நான்கு பசுக்களிடம்  வேட்டையாட வந்தாள் இந்த நான்கு பசுக்களிடம் தோற்று தான் செல்லும். பசுக்கள் ஒற்றுமையாக இருந்ததால் காட்டில் உள்ள எந்த ஒரு விலங்குகளும் நெருங்க கூட முடியவில்லை.
ஒரு நாள் நரி ஒன்று தைரியமாக இந்த பசுவிடம் வந்து தந்திரமாக செயல்படுவதாக எண்ணி பசுவிடம் பல தடைகளை வாங்கிச் சென்று ஒரு பாடத்தை கற்றுக் கொண்டது. முதலில் இருந்து பசுக்களை நன்றாக கவனித்து வந்தது புலி ஒன்று. காட்டில் ஒற்றுமையாக இருந்ததால் நான்கு பசுக்களும் நன்றாக குறுகுறுவென இருந்தது.
தினமும் புலி மறைந்திருந்து கவனித்து வந்தது.ஒருநாள் தன்னம்பிக்கையோடு தைரியமாகவும் பசுக்களை வேட்டையாட சென்றது. ஆனால் புலி தோற்றுப்போனது. நரிக்கு நடந்ததுதான் இந்த புலிக்கும் நடந்தது. பலத்த அடி வாங்கி கொண்டு சென்ற புலி தந்திரமாக யோசித்தது. இந்த நான்கு பசுக்களும் ஒன்றாக இருந்ததால் ஒன்றுமே செய்ய முடியாது.
தனித் தனியாக பிரித்தால் இதை மனதில் உருவாக்கிக் கொள்ள முடியும் என்று காத்திருந்தது. சில நாட்கள் கடந்தன. ஒருநாள் நான்கு பசுக்களுக்கும் ஒன்றுக்கு ஒன்று சண்டை போட்டுக் கொண்டது.இனிமேல் உங்களுடன் இருக்க மாட்டேன் என்று ஒவ்வொரு பசுவும் கூறிக்கொண்டு ஆளுக்கு ஒரு திசையில் பிரிந்து சென்றனர். பசுக்கள் தனித்தனியாக பிரிந்துசென்றது எல்லாம் புலி மறைந்திருந்து பார்த்து கொண்டிருந்தது.
இதுதான் நல்ல வாய்ப்பு.இந்த வாய்ப்பு நழுவவிட்டால் இந்த பலநாள் கனவு கலைந்துவிடும் என்று ஆகையால் இதை நழுவ விட கூடாது என்று முடிவு செய்து ஒரு நாளுக்கு ஒரு பசுவின் பின் சென்று அதற்கு உணவாக்கிக்கொண்டது புலி. நான்கு பசுக்களும் தனித்தனியாக சென்றதால் புலியிடம் பரிதாபமாக உயிரிழந்தது. ஒன்றாக இருந்திருந்தால் 4 பசுக்களும் உயிரோடு இருந்து இருக்கும்.

Comments

Popular posts from this blog

குரங்கும் தொப்பி காரனும்

இந்த திராட்சை புளிக்கும்